சென்னை, ஜூன் 7- தமிழ்நாட்டில் நேற்று (7.6.2022) ஆண்கள் 47, பெண்கள் 43 என மொத்தம் 90 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னை யில் 48 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 56,173 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 17,286 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (7.6.2022) மட்டும் 64 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 862 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 107 ஆகவும், சென்னையில் 43 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு சற்றே அதிகரித்த வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்து உள்ளது கவனிக்கத்தக்கது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 4,518 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 25,782 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,779 பேர் நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 194.12 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு
கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி
புதுடில்லி, ஜூன் 7- நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப் பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அய்தராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ' நிறு வனம், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப் பூசியை கண்டுபிடித்துள்ளது.
இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தற்போது 5 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. இந்நிலை யில், பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து பயாலஜிக்கல்-இ நிறுவன நிர்வாக இயக்கு நர் மஹிமா தட்லா கூறும்போது, “பூஸ்டர் டோஸாக கோர் பேவாக்ஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி யடைகிறோம். இது இந்தியாவில் கரோனா பூஸ்டர் டோஸ் களின் தேவையை நிவர்த்தி செய்யும். இந்த ஒப்புதலானது, கோர்பேவாக்ஸின் நீடித்த உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரங்கள் மற்றும் உயர் நோயெதிர்ப்புத் திறனை மீண்டும் ஒரு முறை பிரதிபலித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment