புதுடில்லி, ஜூன் 8- உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (2022), இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.
180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள் ளது. கொலம்பியா மற் றும் யேல் (சீகிலிணி) பல் கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மொத்தம் 11 பிரச்சினை களை முன்வைத்து 40 குறியீடுகளின் அடிப் படையில் இந்த தரவரிசை ஆய்வு எடுக்கப்பட்டது.
அதன்படி இதில் முதல் இடம், டென்மார்க் பிடித்துள்ளது. டென் மார்க் 77.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அமெ ரிக்கா இந்தப் பட்டியலில் 43ஆவது இடமும், இந் தியா கடைசி இடமான 180ஆவது இடமும் பெற் றுள்ளது. இந்தியா பெற்ற மதிப்பெண்கள், 18.9 மதிப்பெண்கள் ஆகும். இந்தியா பின் தங்கியதற் கான காரணமாக சொல் லப்படுவது, மோசமான காற்று மாசு, விரைவாக அதிகரிக்கும் பசுமை இல்ல வாயு ஆகியவை. இந்த காரணங்களால் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா கடைசி இடம் பிடித்து உள்ளது.
இந்தியா மட்டுமல்ல, மற்றொரு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனாவும், ரஷ்யாவும் பின் தங்கிய இடங்களையே பிடித்துள்ளது. இந்த ஆய்வு முடிவில் சொல் லப்பட்டுள்ள மற்றொரு விஷயம், இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளும் இதே நிலை யில் சுற்றுச்சூழலில் பின் தங்கினால் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலக ளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் 50 சத வீதத்துக்கும் அதிகம் அந் நாடுகளே கொண்டிருக் கும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment