அக்னிபத் திட்டம், இளைஞர்களை ஏமாற்றும் திட்டமாகும்: மேகாலயா ஆளுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

அக்னிபத் திட்டம், இளைஞர்களை ஏமாற்றும் திட்டமாகும்: மேகாலயா ஆளுநர்

ஷில்லாங்க் ஜூன் 27- அக்னிபத் திட்டம், இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி அவர்களை ஏமாற்றும் திட்டம் என்று மேகாலயா ஆளு நர் கூறியுள்ளார்.

 முப்படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மேகா லயா ஆளுநர் சத்யபால் மாலிக்கும் ஒன்றிய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்ததாவது, 'எதிர் கால போர் வீரர்களான இளைஞர் களுக்கு அக்னிபத் திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமும் இன்றி வீடு திரும்பும் அவர்களுக்கு திருமண வரன்கள் கிடைக்காது, எதிர்கால வாழ்க் கைக்கான பொருளாதாரத்திற்கு உத்திரவாதமும் இல்லாமல் போய் விடும்

அந்தவகையில் அக்னிபத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது' என சாடி னார். எனவே ஒப்பந்த அடிப் படையில் ஆள்தேர்வு செய்யும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரா கவும் ஆளுநர் சத்யபால் மாலிக் போர்க்கொடி உயர்த்தி அரசு வட் டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment