சென்னை மாநகரில் மின்சார பேருந்துகள் இயக்கத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

சென்னை மாநகரில் மின்சார பேருந்துகள் இயக்கத் திட்டம்

சென்னை, ஜூன் 26  சென்னை மாநகரில் இயக்குவதற்கு 100 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்படும் சாலை போக்குவரத்து நிறுவனம் கோரியுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு சார்ஜ் வசதியுடன் இணைந்து பேருந்துகளை வழங்கக்கூடிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களிடம் இருந்து அய்ஆர்டி ஏலம் கோரியுள்ளது.

ஒப்பந்த ஆவணங்களின்படி, இந்த பேருந்துகள் அனைத்தும் சக்கர நாற்காலியில் செல்லும் பயணிகளுக்கு ஒன்று உள்பட 36 பேர் இருக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக இருக்க வேண்டும். ஏலதாரர்கள் தரையின் உயரத்தை 400 மில்லி மீட்டருக்கும் குறைவாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் பயணிகள் எளிதாக பேருந்துகளில் ஏறி இறங்கலாம். சக்கர நாற்காலியுடன் பயணிப்போரின் வசதிக்காக அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகையில், ‘டில்லி, மும்பை மற்றும் புனேவை தொடர்ந்து மின்சார பேருந்துகளை இயக்கும் பெருநகரங்களில் சென்னையும் இணைந்துள்ளது. மாநில அரசு இந்த செயல்முறையை மேலும் தாமதப்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினர்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர், ‘சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு மேலும் 400 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான முன்னோட்டமாக தற்போதைய கொள்முதல் அமையும். ஆரம்ப செயல்பாட்டு வெளியீட்டின் வெற்றியின் அடிப்படையில் மொத்த கொள்முதல் 2024க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜிங் உள்கட்டமைப்பை பொறுத்தவரை ஒரே இரவில் முழுவதும் சார்ஜ் செய்தல் அல்லது ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் 10-30 நிமிடங்கள் சார்ஜ் செய்தல் என்ற இரண்டு மாடல்களில் எதை தேர்வு செய்வது என இன்னும் இறுதி செய்யவில்லை. ஏல மதிப்பீட்டிற்கு பின் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

தொழில்முனைவோர்களுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 26  வருடாந்திர நிகழ்வாக நடைபெறுகிற சிறப்புமிக்க கவின்கேர் - எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுக்கு தொழில்முனைவோர்கள் மற்றும் வணிக நிறுவனர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிதியாண்டு 2020-2021இல் ரூ. 100 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் 

(turn-over) கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேவையான விபரங்களோடு சேர்த்து 11ஆவது கவின்கேர் - எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் விருதுக்கு https://ckinnovationawards.in/ என்பதில் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் எஃப்எம்சிஜி துறையின் பெரு நிறுவனமான கவின்கேர், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (MMA) உடன் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயல்முயற்சியான இவ்விருது தொழில்முனைவோர்களின் தயாரிப்புப் பொருள்/சேவை ஆகியவற்றின் தனித்துவமான அம்சங்களுக்காக அவர்களை அங்கீகரித்து கவுவிக்கிறது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

பங்குச் சந்தை முதலீடுக்கான

மேம்படுத்தப்பட்ட செயலி அறிமுகம்

சென்னை, ஜூன் 26 அலைஸ் புளூ பங்கு தரகு நிறுவனம் ANT Mobi 2. செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பங்குச் சந்தைகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தகம் செய்வதற்காக புதிதாக மேம்படுத்தப்பட்ட செயலியாகும்.. ANT Mobi 2.0 செயலியானது ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. இந்த புதிய செயலி வர்த்தக ஆர்வலர்களின் உள்ளீடுகளுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வியக்கத்தக்க வகையில் நிலையானதாகவும், அதிவேகமாகவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு அனுபவங்களை மிகவும் எளிதாக்குகிறது

இதில் இடம்பெற்றுள்ள புதிய சிறப்பு அம்சங்கள்:

கைரேகை உள்நுழைவு - இந்த புதிய பயோமெட்ரிக் முறையானது இதன் பயன்பாட்டை எளிதாக அணுக உதவுவதோடு மற்றொருபுறம் பாதுகாப்பையும் வழங்குகிறது.

உலகளாவிய தேடல் பட்டியலில் ஸ்கிரிப் பெயர்களை டைப் செய்வதன் மூலம் வர்த்தகர்கள் 5 சந்தை கண்காணிப்புகளை உருவாக்க இது உதவுகிறது. மேலும் ஒரே நேரத்தில் முக்கிய ஸ்கிரிப்களை எளிதாக பார்க்க ஒரு மார்க்கெட் கண்காணிப்புக்கு 100 ஸ்கிரிப்களை சேர்க்கலாம்.



No comments:

Post a Comment