கலைப்போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு முதல் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

கலைப்போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு முதல் பரிசு

பவானி - குமாரபாளையம் பிரிவு இந்திய மருந்தியல் கூட்டமைப்பு சார்பில் ஜே.கே.கே. நடராஜா மருந்தியல் கல்லூரியில் 24.06.2022 அன்று நடைபெற்ற Intercollege Pharma Cultural Fest  2022 போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரிகள் பங்கு பெற்ற இப்போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் மாணவர்கள் எம். புருஷோத்தமன் மற்றும் சி. சுதர்சனவாசன் ஆகியோர்  பாட்டுப்போட்டியில் பங்கு கொண்டு முதல் பரிசினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களை  கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment