புதுடில்லி, ஜூன் 8 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019ஆம் ஆண் டில் பன்னாட்டு அளவில் நீரிழிவு நோயால் 40 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். அதிக நீரிழிவு நோயாளிகள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத் தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த நீரிழிவு நோயாளிகளில் 6இல்ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர்.
கரோனா தொற்றால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். அவர்களுக்கு சிறு நீரக பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
இந்தியாவில் நீரிழிவு முதல் வகையால் (டைப் 1) பாதிக்கப்படும் சிறார், இளைஞர்களின் எண் ணிக்கை கணிசமாக அதி கரித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட் டோரின் கணையம் இன் சுலினை உற்பத்தி செய் வதை நிறுத்துவதால் ரத் தத்தில் குளுக்கோஸ் அதி கரிக்கிறது. பெரும்பாலும் மரபணு ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. 4 வயது முதல் 14 வயதுக்கு உட் பட்ட சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு முதல் வகை யால் பாதிக்கப்பட்டோர், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைத் திருக்க வேண்டும். ரத்த அழுத்தம், கொலஸ்ட் ரால், உடல் எடையை சீராக வைத்திருக்க வேண் டும். சிறாருக்கு போது மான ஊட்டச்சத்து உண வுகளை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்க ளது வளர்ச்சி ஆரோக்கிய மானதாக இருக்கும். உப்பை குறைவாக பயன் படுத்த வேண்டும். இனிப் புகளை தவிர்க்க வேண்டும்.
நாள்தோறும் 3 வேளை உணவு உட் கொள்ளும் பழக்கத்தை மாற்றி, 6-7 முறை சாப்பிட வேண்டும். தினமும் உடற் பயிற்சி செய்வதுடன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி இன்சுலின் மருந்தை செலுத்த வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment