பள்ளிகள் திறந்ததும் நல்லொழுக்க வகுப்புகள்: அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

பள்ளிகள் திறந்ததும் நல்லொழுக்க வகுப்புகள்: அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 7  தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழ்நாட்டில், வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக் கப்பட உள்ளது. மாணவ, மாணவி கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். முதல் 5 நாள்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப் படும். 

இதில், தன்னார்வலர்கள் மற் றும் காவல்துறையினர் என பலரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் குறித்து பாடம் எடுப்பார்கள். 

இதையடுத்து வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழு தாத மாணவர்களுக்கு வரும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். 

மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வை எழுத முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment