ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவுமில்லை: ரிசர்வ் வங்கி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவுமில்லை: ரிசர்வ் வங்கி

புதுடில்லி, ஜூன் 7  ‘ரூபாய் நோட்டுகளில் காந்தியார் உருவப்படத்தை மாற் றும் திட்டம் எதுவும் இல்லை’ என பல்வேறு புரளிகளுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில் காந் தியாரின் உருவப்படம் மட்டுமே இடம்பெற்று வருகிறது. 

இதற்கிடையே, முதல்முறை யாக மற்ற தலைவர்களின் உருவப் படத்தையும் அச்சிட ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ரவீந்திர நாத் தாகூர், அப்துல் கலாம் ஆகி யோரின் உருவப்படங்கள் அச்சிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதேநேரத்தில், ரூபாய் நோட்டு களில் வழக்கமான இடத்தில் காந் தியாரின் படம் இருக்கும். வாட்டர் மார்க் எனப்படும் மறைவாகத் தெரியும் வகையில் காந்தியார் படம் இருக்கும் இடத்தில் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், மேனாள் குடியரசுத் தலைவர் அப் துல் கலாம் ஆகியோரின் படங் களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்துவருகிறது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்த தகவல் களுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளர் யோகேஷ் தயாள் வெளியிட்ட அறிக் கையில், ‘இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியாரின் புகைப்படத்திற்கு பதிலாக இதர தலைவர்களின் புகைப்படம் இடம்பெறுவதற்கு ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இத்தகைய முயற்சிகளை அல்லது ஆலோசனைகளை ரிசர்வ் வங்கி தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment