சிசு மரணங்களை தடுக்க மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

சிசு மரணங்களை தடுக்க மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ஜூன் 27 கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரணம் தடுப்பது தொடர் பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் சிறீதர் தலைமையில் நடந்தது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பிரசவங்கள் நடை பெறுகிறது. கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் ஒரு மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப் பட்டது. சிசு மரணம் நடைபெற்ற சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவர்கள் சிசு மரணம் குறித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் பிரசவத்தின்போது சிசு மரணம் ஏற்படாதவாறு மருத்து வர்கள் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோ சனைகளை வழங்கி கவனமுடன் மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தி னார். 

மேலும் சிசு மரணத்தை தடுத்திட குழந்தை களுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு தொடர் கண் காணிப்புகளை மருத்துவர்கள் மற்றும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவம் அனைத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவ மனைகளில் தரமாக வும் சிறப்பாகவும், இலவசமாக மேற் கொள்ளப்பட்டு வருவதால் பொது மக்கள் மகப்பேறு களுக்கு அரசு மருத்துவமனைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கருக் கலைப்புகளை சட்டப்பூர்வமற்ற இடங்களில் மேற்கொள்ளாமல் அனைத்து அரசு மருத்துவமனை களிலும் மருத்துவரின் உரிய ஆலோச னையின்படி மேற்கொள்ள வேண் டும். 

அரசின் விதிமுறைகளை மீறி கருக்கலைப்புகளில் ஈடுபடும் மருந் தகங்கள், தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்பூர்வமாக கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.  

No comments:

Post a Comment