வத்திராயிருப்பு, ஜூன் 28- வத்திராயிருப்பு சுவர்ண ரத்னா மகாலில், 26.6.2022 ஞாயிறு காலை 10.30 மணி யளவில், வத்திராயிருப்பு ஒன்றியம் கூமாபட்டி ஆத்தாங்கரைப்பட்டி சு.பெரியசாமி - வெள்ளையம்மாள் இணையரது மகன் பெ.ராஜாராம், வத்திராயிருப்பு மா.இராமர் - ஜானகி இணையரது மகள் இரா.பேச்சியம்மாள் இவர்களது வாழ்விணை ஏற்பு விழா நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் அனைவரையும் வர வேற்று, நிகழ்வை ஒருங்கிணைத்தார். மீட்சி இதழாசிரியர் குறிஞ்சிக்கபிலர், மாவட்ட ப.க. புரவலர் ந.ஆனந்தம், தமிழ்நாடு தொழில் முனைவோர் கூட்டமைப்பு இயக்குநர் ஜெயராமன், மாநில ப.க. துணைத்தலைவர் கா.நல்ல தம்பி, பொதுக்குழு உறுப்பினர் வான வில் வ.மணி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.
திராவிடர் கழகப் பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி விழாவில் வாழ்விணையர் உறுதிமொழி ஏற்கச் செய்து, மணவிழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.
வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் மு.சீனி, மண்டல இளைஞரணிச் செய லாளர் இரா.அழகர், அருப்புக்கோட்டை நகரத் தலைவர் சு.செல்வராசு, செய லாளர் பா.இராசேந்திரன், சிவகாசி நகரத் தலைவர் மா.முருகன், செயலாளர் து.நரசிம்மராஜ், அமைப்பாளர் பெ.கண் ணன், திருவில்லிபுத்தூர் நகரச் செய லாளர் இரா.கோவிந்தன், மகளிரணி கார்த்திகைச்செல்வி, திருத்தங்கல் நகர அமைப்பாளர் மா.நல்லவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி - சீனியம்மாள், செயலாளர் ந.ஆசைத் தம்பி - சுகன்யா, அருப்புக் கோட்டை க.திருவள்ளுவர், கூமாபட்டி பா.நடராசன், ஆகாசம்பட்டி அ.சுப் பிரமணி மற்றும் தோழர்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
சந்தா, நன்கொடை
மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.3000/- விடுதலை ஆண்டுச் சந்தா ரூ.2000/-நன்கொடை வழங்கினர்.
நிறைவாக தோழர் இரா.கார்த்தி கேயன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

No comments:
Post a Comment