சென்னை, ஜூலை 26 பொது இடங்களில் குப்பை கொட்டிய வர்கள் மற்றும் சுவரொட்டி ஒட்டியவர்களிடம் இருந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ. 12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியை அனைத்து வசதிகளிலும் மேம் படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்த திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர் மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியியல் சென்னை, சீர் மிகு சென்னை, கலாசாரம் மிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பசுமை சென்னை, தூய்மை சென்னை உள்ளிட்ட முயற்சிகள் மூலம் சென்னை மாநகராட்சியை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதன்படி இயற்கை பரப்பு களை அதிகரித்தல், சுவர்களின் வண்ணம் தீட்டுதல், பாலங்களுக்கு கீழ் பகுதிகளை சீரமைத்தல், செயற்கை நீருற்று அமைத்தல் உள் ளிட்ட பணிகளை சென்னை மாநக ராட்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 4 திசைகளிலும் சென்னை மாநகராட்சியில் நுழைவாயில் களாக உள்ள பகுதிகளை அழகுப் படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப் பையை தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்றும், பொது இடங் களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வரு கிறது.
இதேபோல், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம் பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் தமிழ்நாட்டின் கலாசாரத் தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகு படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடத்திய ஆய்வில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவ ரொட்டி ஒட்டிய நபர்களுக்கும் ரூ. 12,13,820 அபராதம் விதிக்கப்பட் டுள்ளது, என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment