ஈரோடு, குருவரெட்டியூரில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் (4.7.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

ஈரோடு, குருவரெட்டியூரில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் (4.7.2022)

குருவரெட்டியூர் பகுதி திராவிடர் கழக  இளைஞரணியினர் சார்பில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்று விடுதலை சந்தா தொகை ரூ.20,000/- வழங்கினர்.   

*****
குருவரெட்டியூர் பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை சுடரொளி ப. பிரகலாதன் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர், ஈ.வெ.கி.ச. இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிரகலாதனின் இணையர் மாதேஸ்வரி,  தங்கைகள் ஈஸ்வரி, ஜீவா, குள்ளம்மாள்,  சகோதரர்கள் சத்தியமூர்த்தி, அர்சுனன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.
*******
 கோபி குமாரராஜா தனது பணி நிறைவையொட்டி தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா தொகை ரூ.10,000/-  வழங்கி வாழ்த்துப் பெற்றார். ஈரோடு பாலகிருட்டிணன் விடுதலை சந்தா தொகை ரூ.10,000/-மும், ஈரோடு சரவணகுமார் விடுதலை சந்தா ரூ.2000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: ஈரோடு சண்முகம். (ஈரோடு - 4.7.2022)
*****
படம் 1: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் இயக்க புத்தகத்தை  வழங்கினார். படம் 2: குறிஞ்சி சிவகுமார், (தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.)  மண்டல தலைவர் காட்டுசுப்பு மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர்.  படம்: 3 குறிஞ்சியார் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். (ஈரோடு - 4.7.2022)
*****
கோபி பகுதி தோழர்கள் வழங்கிய சந்தாக்கள்





No comments:

Post a Comment