அடிவயிறு எரிகிறது! எரிகிறது!! சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

அடிவயிறு எரிகிறது! எரிகிறது!! சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு


சென்னை, ஜூலை 7 சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. இந்த மாதம் ஜூலை 1ஆம் தேதி முதல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டது. 

இதில் வணிக சமையல் எரிவாயு உருளை விலை குறைந்தாலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை நேற்று (6.7.2022) ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.  இதன்படி சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 7 ஆம் தேதி 1015.50 ஆகவும், கடந்த மே 19ஆம் தேதி ரூ.1018.50 ஆகவும் இருந்த வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை  மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment