மலரும் நினைவுகள்... சைக்கிள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

மலரும் நினைவுகள்... சைக்கிள்...

மிதிவண்டி அய்ம்பது வருடங்களுக்கு முன் கனவில் வலம் வரும் வண்டி இது.  எவ்வளவு ஆசைகள் கனவுகள் லட்சியங் கள்.  மிதிவண்டி வைத்திருந்தாலே அவ்வ ளவு மதிப்பு. மலரும் நினைவலைகள் பின் னோக்கி போகிறது

மலரும் நினைவுகள்... சைக்கிள்...

1985ஆம் ஆண்டுக்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் அய்ம்பது வீடுகளில் தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப் பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார்.

HERO MAJESTIC, TVS  மெபெட் டுகளுக்கு முந்தினது SWEGA...

 அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் தான் போகும். 

எப்பவாவது கடந்து செல்லும் Rajdoot Jawa  மற்றும் Yazdi..எங்கேயோ  கேட்கும் புல்லட் சத்தம்...

இப்போது கார், மோட்டார் பைக் வாங் குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. 

ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND)  வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப் பார்கள்.

ராலி, ஹெர்குலஸ், அட்லஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந் தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" . 

அடுத்து... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால்  ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள்.   மளிகை கடையில் லோடு அடிக்க பெரும்பாலும் ஹெர்குலஸ் தான். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுதுப் பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள் களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத் தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.

இப்போது கார்கள், மோட்டார் பைக்கு களை "சர்வீஸுக்கு" விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக் கிள் பழுதுப் பார்க்கும் கடைகளில் விடு வார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள் அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹீரோ வாக தெரிந்தார்கள்..

இப்போது கார்களுக்கு  "WHEEL. ALIGNMENT, WHEEL BALAN CING" செய்வது போல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். 

அதற்கு "வீல் கோட்டம் எடுப்பது" என் பார்கள்.

1979ஆம் ஆண்டுக்கு முன்பு சைக்கிள்க ளுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE  எடுக்க வேண்டும்.  

இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

முதலில் குரங்கு பெடலில் ஓட்டக் கற்று பிறகு பாரில் அமர்ந்து ஓட்டி சீட்டில் அமர்ந்து செல்லும் சுகமே தனி தான்,  சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும் போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறை யினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள். சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது.  இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது.  அந்த லைசென்ஸும் பிற்காலத்தில் ஒழிக்கப்பட்டது.

அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களிலான செய் யப்பட்ட பலவித நிறங்களாலான அலங்கா ரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது. 

மட்கார்டுகளில் பின்புறம் வெள்ளை பெயிண்ட் அடித்து பெயர் எழுத தனியே ஆட்கள் வருவார்கள்.. 

அதில் வித விதமாக படங்கள் இயற்கை காட்சிகளை வரைந்து வைத்திருப்பார்கள்..

ஹேண்டில் பார்களில் ஸ்பிரிங் வைத்த கலர் கலர் கைகள் மாட்டி பந்தா காட்டி செல் வார்கள்.. குழந்தைகளை கூட்டி செல்ல ஒயர் கூடைகள் எக்ஸ்ட்ராவா மாட்டியிருப் பார்கள்.. 

அதை வாங்க வசதி இல்லாதவர்கள் பாரில் துண்டை மொத்தமாக சுற்றி உட்கார வைத்துச் செல்வார்கள்..

இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள் களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி... 

இன்னும் அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம். எப்படி ஆயினும் பழைய நினைவுகள் மட்டும் தான் நமக்கு ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தருகின்றன...

இது தான் அப்பட்டமான உண்மை.

No comments:

Post a Comment