கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் கடைவீதிகளில் சென்று பொதுமக்களை சந்தித்து மாநில இளைஞரணி மாநாட்டிற்காக நன்கொடை திரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன் இந்த பணியினை தொடங்கி வைத்தார். கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர். கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள். மாநகர துணைத் தலைவர் ஹ.செய்க்முகமது. பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் பெரியார்தாஸ், திராவிடர் மாணவர் கழக பொறுப்பாளர் கோகுல், தோழர்கள் ராஜேஷ், யுவான்ஸ், சியாமளா, சதீஷ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். அரியலூரில் நடைபெற உள்ள திராவிடர்கழக இளைஞரணி மாநில, மாநாட்டிற்கு நன்கொடைகளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment