புதுடில்லி, ஆக.26 சி.பி.அய். தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை யில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள் ளது. அதில் இடம் பெற் றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* சி.பி.அய். தொடுத் துள்ள வழக்குகளில் ஏறத்தாழ 6,700 ஊழல் வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. அவற்றில் 275 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன.
* 1,939 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையும், 2,273 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 811 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை யும், 1,399 வழக்குகள் 3 ஆண்டுகளுக்குள்ளும் தேங்கி உள்ளன. இது, கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரம்.
9.935 மேல்முறையீட்டு வழக்குகளில் 9,698 நீதிமன்றங்களிலும், 237 உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. 1.099 மறு ஆய்வு முறையீடுகளும் நீதிமன்றங்களில் தேங்கி உள்ளன.
* 10 ஆயிரத்து 974 மேல் முறையீடு மற்றும் மறு ஆய்வு முறையீடுகளில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், 558 வழக்குகள் 15 ஆண்டு களுக்கு மேலாகவும், 1,749 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 3,665 வழக் குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 2,818 வழக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக வும், 1,823 வழக்குகள் 2 ஆண்டுகளுக்குள்ளும் நிலுவையில் உள்ளன.
* 645 ஊழல் வழக்குகளில் சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது. இவற்றில் 35 வழக்குகளில் விசாரணை 5 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது.
* 2021ஆ-ம் ஆண்டு 549 சிவில் சர்வீசஸ் (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எப்.எஸ்) அதிகாரிகள் மீதும், 221 அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டட்) அதிகாரிகள் மீதும் சி.பி.அய். வழக்கு பதிவு செய்துள்ளது.
* சி.பி.அய். அதிகாரி களுக்கு எதிராக 75 வழக் குகள் துறைசார் விசாரணை யின் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment