சுய வேலைவாய்ப்புத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

சுய வேலைவாய்ப்புத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு

சென்னை,ஆக.26-  தமிழ்நாட் டில் கடந்த 2010-_2011 ஆம்ஆண்டு முதல், குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான பணி உருவாக்கும் திட்டத்தின் கீழ், சுய வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி, பயனாளிகள் பொதுப் பிரிவினராக இருந்தால் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்பிசி, பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், மேனாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், பய னாளி 8ஆவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தொழில் துறை ஆணையர் எழதிய கடிதத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான மாற்றுத் திற னாளிகள் சங்கங்ளுடன் நடத் தப்பட்ட கூட்டத்தில், தகுதி களை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநல பாதிப்புடைய மாற்றுத் திற னாளிகளின் பெற்றோருக் கான வயது வரம்பு,குடும்ப வருமானம் ஆகியவற்றை தளர்த்துவதுடன், கல்வித் தகுதியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் துள்ளனர். எனவே, இந்த தளர்வுகளை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதைப் பரிசீலித்த தமிழ் நாடு அரசு, மாற்றுத் திற னாளிகள் மற்றும் மனநலப் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவதற்கான அதிகபட்ச வயதுவரம்பை 45-லிருந்து 56-ஆக உயர்த்தியுள்ளது. மேலும், கல்வித் தகுதியும் நீக்கப்படுகிறது. இந்த தளர் வுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. -இவ்வாறு  அரசாணையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.


No comments:

Post a Comment