நாகர்கோவில், ஆக.9- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழக கலந்துரை யாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடந்தது.
கலந்துரையாடல் கூட்ட நிகழ்ச்சிக்கு கழக குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், திக மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக் குழு உறுப்பினர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரா விடர்கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் சிறப் புரையாற்றினார்.
மண்டல மாணவர் கழகச் செய லாளர் இனியன், இளைஞரணி மாவட்ட செயலாளர் எஸ். அலெக்சாண்டர் மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலா ளர் பெரியார் தாஸ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது, தோழர்கள் யுவான்ஸ், ம.செல்வராசு, உட்பட பலரும் கலந்து கொண்ட னர். தந்தை பெரியாரு டைய கருத்துக்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களு டைய கருத்துகளை எடுத்துச்செல்லும் விடுதலை நாளிதழுக்கு அதிகமாக சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் வழங்க வேண்டும், திண் டுக்கல்லில் நடைபெற உள்ள திராவிடர்கழக தென்மண்டல கலந்துரையாடல் கூட்டம் மற்றும் சென்னையில் நடைபெற உள்ள விடு தலை சந்தா வழங்கும் விழாவில் தோழர் கள் பெருந்திரளாக பங்கேற்க வேண் டும், மாணவர்களுக்கு பெரி யாருடைய கருத்துக்களை எடுத்துக் கூறும் வகையில் பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டியினை அனைத்து பள்ளிகளில் நடத்த வேண்டுமென கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment