கனடா நாட்டில் ஹாலிபேக்ஸ் நகரில் 24.8.2022 அன்று நடைபெற்ற 65ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்தியாவிலிருந்து மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா மற்றும் மாநிலங் களின் சட்டமன்ற அவைத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அம்மாநாட் டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் இருந்தது.
மாநாட்டில் நாடாளுமன்ற மக்கள வையின் அவைத்தலைவர் ஓம்பிர்லா தலைமையில் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற அவைத்தலைவர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற இந்திய தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் இருந்ததைப் பார்த்து சட்டமன்ற அவைத் தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் , தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் இருந்த ஒளிப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இணைய வாசிகள் பலரும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக தேசியக் கொடியைக் கூட இறக்குமதி செய்வதா? மேக் இன் இந்தியா திட்டம் என்ன ஆனது என பலர் கேள்வி எழுப்பி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் எப்படி இடம் பெற்றது என்பது குறித்து இன்னும் ஒன்றிய அரசு பதில் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
சமூக ஊடகங்களில் படத்துடன் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி பரவியுள்ளது.

No comments:
Post a Comment