சென்னை,செப்.24- தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், இணைய தள ரம்மி தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கவும், புதிய முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகள் அளிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இளைய தள ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏராளமானோர் பணத்தைப் பறிகொடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில், தற்போதைய திமுக அரசு, சட்டவல்லுநர்களுடன் ஆய்வு செய்தும், பல்வேறு தரப் பினரிடம் கருத்துகள் கேட்டும், புதிய அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
Saturday, September 24, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment