புதுடில்லி, செப்.3 பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியா வில் அறிமுகப் படுத்தப்பட்டது. ஒன்றிய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்தன.
சமீப காலங்களாக, பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் போது கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படு வதை தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,கர்ப்பப்பை வாய் புற்று நோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த நாள் வரை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடு களில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியா வில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க் கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மய்யம் அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து தடுப்பூசிக் கான சோதனைகள் செப்டம்பர் 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் 12 இடங்களில் மேற் கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ஆம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக் கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய் யப்பட்டது. இதனை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment