நெருப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

நெருப்பு!

இள‌ம் ப‌ருவ‌ம் முத‌லே க‌ம்யூனிச‌ கொள்கைக‌ள்பால் ஈர்ப்பு இருந்தாலும், பெரியாரை நான் ப‌டிக்க‌ துவ‌ங்கிய‌து என் 20-க‌ளின் ஆர‌ம்ப‌த்தில்தான். 

முழுக்க‌ முழுக்க‌ இந்திய‌ க‌லாச்சார‌, ச‌மூக‌ சூழ‌லுக்கு பொருந்த‌க்கூடிய‌தாய் அவருடைய‌ க‌ருத்துக்க‌ள் இருப்ப‌தை க‌ண்ட‌பின்தான் அவ‌ர்மீது ம‌ரியாதை எற்ப‌ட்ட‌து.

என் க‌ல்லூரி ம‌ற்றும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ கால‌ங்க‌ளில் மார்க்ஸ், அம்பேத்க‌ர், பெரியார் ப‌ற்றி நிறைய‌ வாசித்திருக்கிறேன், யோசித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன்.

மார்க்ஸ் அள‌வுக்கு புரிய‌ சிர‌ம‌மில்லாத‌ சிந்த‌னைச்ச‌ர‌ம் பெரியாருடைய‌து. பெரியாரின் ச‌ம‌யோசித‌ பேச்சில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌வ‌ற்றில் ஒன்று இது...

ஒருவர் கேட்கிறார், "க‌ட‌வுள் இல்லைன்னு ச‌தா சொல் லிண்டிருக்கேளே..? திடுப்திப்-னு க‌ட‌வுள் உம்ம‌ முன்னாடி பிர‌ச‌ன்ன‌மா கிட்டா என்ன‌ ஓய் சொல்லுவேள்..?"

பெரியார் எந்த‌ ச‌ல‌னமும் இன்றி, "க‌ட‌வுள் இருக்கார்னு சொல்லுவேன்" என்கிறார்.

புத்த‌கத்தில் ப‌டித்தோ, ம‌ன‌ன‌ம் செய்தோ  ப‌குத்த‌றிவு  பேசுவ‌து பெரிய‌ விச‌ய‌மில்லை. ஒன்றை உண்மையிலேயே ப‌குத்து, ஆராய்ந்து, சிந்தித்து ஏற்ப‌தும் பேசுவ‌துமே சிற‌ப்பான‌து. ந‌ம் அடிப்ப‌டை கல்விக்க‌ட்ட‌மைப்பே அப்ப‌டி ந‌ம்மை உருவாக்கும் வித‌மாக‌ நிர்மாணிக்க‌ப்ப‌ட‌வில்லையே, இல்லையா..? அப்ப‌டியான‌ ச‌மூக‌-அர‌சிய‌ல் சூழ‌லில், ம‌க்க‌ளை சுய‌மாக‌ சிந்திக்க‌ ப‌டிப்ப‌டியாக‌ க‌ற்றுத்த‌ந்த‌ ஆசிரிய‌ர் ஈ.வெ.ரா. பெரியார்.

"யார் சொன்னாலும், உன் வேதம் சொன்னாலும், ஏன்... நானே சொன்னாலும், எதையும் க‌ண்மூடித்த‌ன‌மாக‌ ஏற்காதே. உன் புத்திக்கு ச‌ரியென்று தெரிந்தால் ம‌ட்டுமே ஏற்றுக்கொள்" என்று சொல்ல‌ ஒரு நேர்மை வேண்டும். 

க‌டவுள் ம‌றுப்புக் கொள்கைக்கு விஞ்ஞான‌, சித்தாந்த‌ கார‌ ண‌ங்க‌ளை க‌ட்ட‌மைத்து, நெறிப்ப‌டுத்தி, விள‌க்கி கொண்டிருக்க ‌வில்லை பெரியார், ச‌மூக‌ (அ)நீதியையே மய்ய‌மாக‌ வைத்தார். உங்க‌ளையும் என்னையும் போன்ற‌ சாமானிய‌ர்க‌ளே நிற‌ம், மொழி, ஜாதி, ம‌த‌ம், இன‌ம், பிற‌ப்பு, பொருளாத‌£ர‌ம், ப‌டிப்பு போன்ற‌ த‌டைக‌ளை க‌ட‌ந்து மானுட‌ம் நேசிக்கும்போது... இறைவ‌ன் என்ற‌ ஒன்று இருந்தால், அது  ந‌ம்மைவிட‌வும் எவ்வ‌ள‌வு அன்பான‌தாக‌வும், க‌ருணை மிகுந்த‌த‌£க‌வும் இருக்க‌ வேண்டும்..? 

அறத்தையும், நீதியையும் நிலைநாட்டும் ஒன்றைத்தான் இறை என்று அழைக்க‌ இய‌லும். பிற‌ப்பில் ஏற்ற‌த்தாழ்வு க‌ற்பிக்கும் ஒன்று ம‌னித‌ ம‌ட‌மையின் வ‌டிகாலே என்று திண்ண‌மாக‌ அறிந்திருந்தார் பெரியார். அத‌னால்தான் "க‌ட‌வுளை க‌ற்பிப்ப‌வ‌னை" முட்டாள் என்றார்.

ஈ.வெ.ரா. என்ற‌ த‌னிம‌னித‌னை வெறித்த‌ன‌மாக‌ விம‌ர்சிப்ப ‌வ‌ர்கூட‌ அவ‌ருடைய‌ ச‌மூக‌நீதி சித்தாந்த‌த்தை விம‌ர்சிக்க‌ முன்வ‌ர‌மாட்டார். பெரியாரை வெறும் க‌ட‌வுள் ம‌றுப்பாள‌ராக‌ ம‌ட்டும் அவ‌ர்க‌ளால் பிம்ப‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌தும் அதனால்தான்.

கார‌ண‌ம்... தெரிந்து தொட்டாலும் தெரியாம‌ல் தொட்டாலும், நெருப்பு சுடும்..!

தோழ‌மையுட‌ன்,

Fazil Freeman Ali

- முகநூலிலிருந்து


No comments:

Post a Comment