சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு

சென்னை,செப்.8- தமிழ்நாட்டில் சமூக ஊடகங்கள் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங் களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி வருகின்றனர். 

எனவே  அவர்கள்  யார் என்பதனை கண்டுபிடித்து,  அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழு, தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற் காகவும் இந்த குழு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவைப் பொறுத்தவரை சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங் களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அந்தப் பதிவினை  நீக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும், கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்வதற்கும் இந்த குழு செயல்படும். ஜாதி, மத, அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும், இந்த குழு செயல்படும் என காவல்துறை தரப்பிலிருந்து செய்தி குறிப்பாக வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment