தமிழர் தலைவரின் பாராட்டிற்கு நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

தமிழர் தலைவரின் பாராட்டிற்கு நன்றி!

24-9-2022 அன்று விடுதலை ஏட்டில் தங்களது 'வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் எனது தன் வரலாற்று நூலான 'ஒரு சிற்றோடையின் கதை'யையும், என்னையும் பாராட்டி எழுதியிருந்ததைப் படித்து இன்ப அதிர்ச்சியும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைந்தேன்.தங்களது ஓய்வில்லா கழகக் களப் பணிகளுக்கு மத்தியில் எனக்காக நேரம் எடுத்து, 'சிற்றோடையில் நனைந்த இன்பம்' என்ற பொருள் பொதிந்த (self explanatory)  தலைப்பில் மிகுந்தப் பெருந்தன்மை காட்டி எனது நூலைப் பாராட்டி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.

I am simply overwhelmed by your  magnanimous appreciation of my work.

அய்யா,உங்களுக்குப் போதுமான அளவில் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இருப்பினும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தும், உங்கள் பாராட்டிற்குத் தகுதி உள்ள மனிதனாகவும் பெரியாரியத் தொண்டனாகவும்  தொடர்ந்து இருந்து வருவேன் என்ற உறுதியைத் தெரிவித்தும் இந்த மடலை நிறைவு செய் கிறேன்.

சு.பழநிராசன், சித்திரக்குடி


No comments:

Post a Comment