திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜின் தாயார் இருதயமேரி (வயது 85) உடல் நலக் குறைவால் சிறிது காலம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் நேற்று (27.9.2022) இரவு மறைவுற்றார். மறைந்த அம்மையாருக்கு ஆரோக்கியராஜ், சகாயராஜ் (மறைவு), அலெக்சாண்டர், ஜேம்ஸ், சாக்ரடீஸ் அகிய மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவரும் ஒரே இல்லத்தில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த அம்மையாரின் உடல் நாளை (29.9.2022) திருவெறும்பூர் அருகேயுள்ள வேங்கூர் வி.எஸ்.நகரிலிருந்து காலை 11 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு மேலபுதூர் கல்லறை தோட் டத்தில் உடல் அடக்கம் செய்யப்படும். அம்மையார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: ஆரோக்கியராஜ் - 9443535923

No comments:
Post a Comment