கேரளாவிலும் ஆளுநர் அதிகாரத்தை பறிக்க தனி மசோதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

கேரளாவிலும் ஆளுநர் அதிகாரத்தை பறிக்க தனி மசோதா

திருவனந்தபுரம்,செப்.3- கேரளா வின் கண்ணூர் பல்கலைக் கழகத்தில் மலையாளம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு சமீபத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பட் டியலில் முதல் இடத்தில் முதலமைச்சர் பினராய் விஜயனின் தனிச் செயலாளர் கே.கே. ராகேஷின் மனைவி ப்ரியா வர்கேஷி இடம் பெற்றிருந்தார். இது குறித்து புகார் வந்ததும், கேரள ஆளுநர் ஆரிப் முக மது கான் அதற்கு தடை விதித்தார்.

இதையடுத்து பல்கலைக்கழக சட் டத்தில் கேரள அரசு திருத்தம் செய்தது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் அதிகாரம் அதில் குறைக்கப் பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா கேரள சட்டப்பேரவை யில்  1.9.2022 அன்று நிறைவேற் றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜன நாயக முன்னணி கட்சிகள் வெளி நடப்பு செய்தன. இது குறித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் கூறுகையில், “இந்த மசோதா, மாநிலத்தின் உயர்கல்வித் துறைக்கு அவமதிப்பு போன்றது. இந்த மசோதா பல்கலைக் கழகங்களின் தன் னாட்சியை பாதிக்கும். உயர் கல்வி துறையில் தவறான முன் மாதிரியை ஏற்படுத்தும்''  என்றார்.

No comments:

Post a Comment