சென்னை, அக்.24 தொடர் விடுமுறை காரணமாக மின் தேவை குறைந்ததால், 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வட சென்னை அனல் மின் நிலையம். இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக மின் தேவை குறைந்த தால் 2ஆவது நிலையில் உள்ள 1ஆவது அலகில் மேற் கொண்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Monday, October 24, 2022
தொடர் விடுமுறை - 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment