உயிரோடு புதைக்கப்பட்ட பெண் கைக்கடிகார தகவலால் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

உயிரோடு புதைக்கப்பட்ட பெண் கைக்கடிகார தகவலால் மீட்பு

வாசிங்டன், அக். 27- அமெரிக்காவின் வாசிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் என்ற பெண் ஒருவர் தனது கணவரோடு சண்டையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது கணவர் அந்த பெண்ணை கத்தியால் குத்தி மனைவி மயக்கமடைந்த நிலையில், அவரை குழிதோண்டி புதைத்து உள்ளார். 

அதைத் தொடர்ந்து அந்தப் பெண், குழியில் போட்டுப் புதைத்து விட்ட தாகக் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்கு அழைப்பு விடுத்து தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர் இருக்கும் இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள்ளேயே அந்த பெண் தானாகவே கட்டை அவிழ்த்து குழியிலிருந்து போராடி வெளியில் வந்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி யுள்ளனர். அந்த வாட்சை அந்த பெண்ணின் கணவர் சம் மட்டியால் அடித்தும் அது உடையாமல் தக்க நேரத்தில் அந்த பெண்ணின் உயிரை காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment