தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை,அக்.9- தமிழ்நாட் டில் மருந்துத் தட்டுப்பாடு இல்லை என்றும் அரசு மருத் துவமனைகளில் மருந்து இல்லையென்றால் இலவச தொலை பேசி எண் 104-க்கு  புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

“தமிழ்நாடு அரசு மருத்துவமனை களில் மருந்து இல்லை என கூறினால், 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம்” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியுள் ளார்.   ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்  விழிப் புணர்வு மினி மராத்தானை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’தமிழ் நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. 169 டன் பான்பாரக் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரி டுதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் அண்டை மாநிலங்களிருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் , ’மருந்து தட்டுப்பாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். 

ஆனால் உண்மையில் தமிழ்நாட் டில் மருந்து தட்டுப்பாடு இல்லை. சந்தேகம் இருப்பவர்கள்  யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் உள்ள 32 கிடங்குகளில் எவ்வளவு மருந்துகள் உள்ளன என்பதை அறிய லாம். அதற்கான ஏற்பாடு செய்யப் பட் டுள்ளது’ என்றார்.  மேலும் இது தொடர்பான புகார் தெரி விக்க 104 என்ற எண் அறிவிக் கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ மனையில் மருத்து இல்லை என 104-க்கு அழைத்து தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment