சிறப்புப்படி
தமிழ்நாடு காவல்துறையில் இரவு ரோந்துப் பணி மேற்கொள்ளும் காவலர்கள் முதல், ஆய்வாளர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்புப்படி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
வெளிநடப்பு
ஊத்துக்கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் 6 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வெளி நடப்பு செய்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி.
எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 'ஆப்' மூலம் செய்யப்படும் இரு சக்கர, ஆட்டோ, கேப் முன் பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.50 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
நியமனம்
புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தும் பணிகளை கண்காணிக்கும் வகையில் 10 மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு.
வருத்தம்
கேரள எல்லைப் பகுதியில் நுழைந்ததாகக் கூறி சிறு வன மகசூல் சேகரித்த தமிழ்நாடு பழங்குடியின பெண்ணை விரட்டியடித்த நிகழ்வுக்கு கேரள வனத்துறை அதிகாரி வருத்தம் தெரிவித்தார்.
சேவை
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய கப்பல்கள், விமானங்கள் இந்திய எல்லையில் இருந்து 1500 கி.மீ. வரை இனி ஜிபிஎஸ். சேவையை பெறும் வகையில் வசதிகள் செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்.
கட்டுப்படுத்த..
உலக சுகாதார நிறுவன வழிகாட் டுதல்படி கொசு உற்பத்தியை கட்டுப் படுத்த துரித நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்.
மாற்றம்
பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஒன்றிய அரசுத் துறையில் முக்கியமான பணியிடங் களில் உள்ள அதிகாரிகளை, விதி முறைப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவு.
No comments:
Post a Comment