சென்னை, அக்.9 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் இருந்து 2022-2023-ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளிப்படிப்பு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த சிறுபான் மையின மாணவ-மாணவிகள் மேற்படி காலக்கெடு விற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ-மாணவிகளிடம் இருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும். தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் விண்ணப் பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிப்படிப்பு உதவித்தொகையை சரிபார்க்க வருகிற 31-ஆம் தேதியே கடைசி நாளாகும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சிறீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sunday, October 9, 2022
மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment