வல்லம், அக். 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதை மருந்து தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் உரை ஆற்றிய பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் டாக் டர் இரா.மல்லிகா, காவல்துறை ஆய்வாளர் கூறிய கருத்துகளை மனதில் கொண்டு போதை மருந்து பரவலை தடுக்க உதவ வேண்டும் என்று கூறிய அவர், இளைஞர்கள் தங்கள் உடலையும் உள்ளத்தையும் கட்டுக் கோப்புடன் வைத்து நாட் டின் பெருமை மிகு குடிமக்களாக விளங்க வேண்டும் என்று குறிப் பிட்டார்.
வல்லம், துணை ஆய்வாளர் கி.அபிராமி, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களிடையே உரையாற்றினார். போதை மருந்து களை உட்கொள்ளும் மாணவர் களின் உடலும், உள்ளமும் பாதிக் கப்படுவதோடு அவர்களின் எதிர் காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று குறிப்பிட்டார். முதுநிலை காவலர் அருண் உரையாற்றும் போது போதை மருந்துகள் விற்கும் கடைகள் மற்றம் சமூக விரோதி களை அடையாளம் காட்டடினால் சமூகத்தில் புரையோடி இருக்கும் போதைப் பழக்கத்தை ஒழிக்கலாம் என்று கூறினார்.

No comments:
Post a Comment