மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க தடையாம்! ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க தடையாம்! ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம்

சென்னை, அக்.24 மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க ஒன்றிய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு நடத்தி வரும் கல்வித் தொலைக் காட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒன்றிய தொலைதொடர்பு கண் காணிப்பு நிறுவனமான ‘ட்ராய்’ (இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) கடந்த 2012-ஆம் ஆண்டு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலில், ‘ஒன்றிய, மாநில அரசுகள், அவற்றின் நிறுவ னங்கள் தனியாருடன் இணைந்து ஒளிபரப்பு தொழிலை மேற்கொள்ளக் கூடாது’என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஆந்திரா, கேரளா, தமிழ் நாடு போன்ற மாநில அரசுகள்கல்வி நோக்கத்துக்காக தொலைக்காட்சி சேனல்களை தொடங்கி நடத்தி வருகின்றன.  

இந்நிலையில், இதுபோன்ற சேனல் களில் வெளியாகும் காட்சிப் பதிவுகளை கண்காணிப்புக்கு உட்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. அதனால், ட்ராய் நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு வழங்கிய அறிவுறுத்தலை ஒன்றிய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 21-ஆம் தேதி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், ‘ஒன்றிய அமைச்சகங்கள், ஒன்றிய, மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை வழங்க கூடாது. அப்படி ஒளிபரப்ப விரும் பினால் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிரச்சார் பாரதி மூல மாகத்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கான பணிகளை அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில், கற்றலை இனிமையாக்கி இடைநிற்றலை தடுக் கும் வகையில் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப் பப்பட்டு வருகின்றன. இதில் ஒளி பரப்பாகும் காட்சிகள் அனைத்தும் அரசுமற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் குழுவால் தயாரிக் கப்படுபவை. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பால் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒன்றிய அரசின் சுற்றறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும், அதில் உள்ள வழிகாட்டுதல்களை பார்த்த பிறகு தான், அது கல்வி தொலைக் காட்சியை பாதிக்குமா, விலக்கு கோர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவரும்’’ என்றனர்.


No comments:

Post a Comment