சென்னை,நவ.8- தமிழ்நாட்டில் நேற்று (7.11.2022) புதிதாக ஆண்கள் 56, பெண்கள் 53 என மொத்தம் 109 பேர் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 27 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 92,919 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 53,898 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 191 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 973 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
தமிழ்நாட்டில் நேற்று முன்னாள் கரோனா தொற்று பாதிப்பு 114 ஆகவும், சென்னையில் 29 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில்...
நேற்று காலை நேர நிலவரப்படி இந்தியா வில் புதிதாக 937 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது. 14,515 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment