சென்னை,நவ.16- அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ ரூ.2.50 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கத்திடம் வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (15.11.2022) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்மொழியின் சிறப்பைப் பரப்பிடும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்ப தற்காக, வரும் கோரிக்கைக்கு ஏற்ப நிதியுதவி வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவ ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன்படி தமிழ் இருக்கை நிறுவும் வகையில் 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
இந்நிலையில், 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான ரூ.2.50 கோடிக் கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் நேற்று (15.11.2022) வழங்கினார்.
வ.உ.சி. விருது: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பெயரில், அவரது 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்தாண்டு செப்.3ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய விருதை முதன்முதலாக, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எண்ணரசு கருநேசனுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
என்று ஒழியும் இந்தக் கொடுமை?
கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மூவர் மரணம்
கரூர். நவ. 16 கரூர் அருகே கழிவு நீர்த் தொட்டியில் முட்டு பிரிக்க சென்ற கட்டடத் தொழிலாளர்கள் 2 பேரும், அவர்களைக் காப்பாற்ற சென்ற மற்றொரு கட்டடத் தொழிலாளி என 3 பேர் விசவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர்.
கரூர் அருகேயுள்ள தோரணக்கல்பட்டி கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்குரைஞர் குணசேகரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிதாக கழிவு நீர்த் தொட்டி (செப்டிக் டேங்) கட்டப்பட்டு 2 மாதங்களாக மூடிப்போட்டு மூடப்பட்டிருந்த நிலையில், தொட்டியின் உள் பகுதியில் உள்ள முட் டுகளை பிரிப்பதற்காக இன்று (நவ.15) மதியம் 3 மணிக்கு கட்டடத் தொழிலாளர்களான தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (23), தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் (38) ஆகிய 2 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.
உள்ளே இறங்கியவர்களை விசவாயு தாக்கியதால் அலறிவாறே உள்ளேயே மயங்கியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்துக் கட்டடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணவாசியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சிவா என்கிற ராஜேஷ்குமார் (35) அவர்களை மீட்க தொட்டிக்குள் இறங்கியதில் அவரையும் விசவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார்.
இதனை கண்ட அங்குள்ளவர்கள் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷவாயுவை கட்டுப்படுத்தி உள்ளே இறங்கி 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாந்தோணிமலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. ஏ.சுந்தரவதனம் நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கரூர் கோட்டாட்சியர் பா.ரூபினாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மாநகராட்சி அலுவலர்களும் நிகழ்விடத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில் புதிதாக
67 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,நவ.16- தமிழ்நாட்டில் நேற்று (நவ.15)ஆண்கள் 36, பெண்கள் 31 என மொத்தம் 67 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச மாக சென்னையில் 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 93,586 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 54,901 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று மட்டும் 104 பேர் குணமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 637 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் நேற்று முன்னாள் கரோனா தொற்று பாதிப்பு 72 ஆகவும், சென்னையில் 13 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில்....
இந்தியாவில் நேற்று (15.11.2022) காலை நேர நிலவரப்படி புதிதாக 474 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 7,918 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
800 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.81 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment