லக்னோ, நவ 14- உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதி கரித்து வருகிறது.
இதன்படி பிரயாக் ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், பிரயாக்ராஜ் நகரில், ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒரு நாள் பள் ளிக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டது. தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் பர வல் அதிகரித்து வருகிறது.
இதுபற்றி பிரயாக் ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் ஷரண் கூறும்போது, மாவட்டத் தில் டெங்குவை ஆய்வு செய்வதற்காக, பல பகுதி களில் பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக் கள் ஒழிக்கப்பட்டு வரு கின்றன என கூறியுள் ளார். இந்த சூழலில் அலகாபாத் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப் புக்கு 36 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு உள் ளது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் அரசு நிர்வா கம் வெளியிடவில்லை.
அலகாபாத் நகரில் பல இடங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள னர் என கூறப்படுகிறது. டெங்கு பாதிப்புகளை முன்னிட்டு முதலமைச் சர் சாமியார் ஆதித்யநாத் உயர்மட்ட சீராய்வு கூட் டம் நடத்தி, அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு பற்றி மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சூழலில், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் பல பகுதி களில் டெங்குவால் பலர் பாதிப்படைந்த தகவல் கள் வெளியாகி உள்ளன. அவர்களில் டெங்கு கடு மையாக பாதித்த 9 நோயாளிகள் மாவட்ட மருத்துவமனையின் டெங்கு வார்டில் சிகிச் சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். எனினும், உயி ரிழப்பு எதுவும் இல்லை. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணியா ளர்கள் குழுவினர் குவிக் கப்பட்டு உள்ளனர்.
மருந்துகள், அத்தியா வசிய உணவுப் பொருட் கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசு அனைத்து மருத்து வர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்க ளின் விடுமுறைகளை ரத்து செய்து அரசு உத்தர விட்டு உள்ளது. கான்பூ ரில் டெங்கு வார்டில் சிகிச்சைக்கு சேர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபற்றி அரசு மருத்துவமனையின் தலைவர் சைலேஷ் குமார் சிங் கூறும்போது, தினசரி 60 முதல் 70 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சேருகின்றனர். அவர்க ளில் டெங்கு பாதிப்பு உறுதியானவர்கள் சிகிச் சைக்கு அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். இது வரை 6 பெரியவர்கள் மற் றும் 7 குழந்தைகள் என 13 பேர் அரசு மருத்துவ மனையில் சேர்ந்து உள்ள னர் என கூறியுள்ளார்.

No comments:
Post a Comment