தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை - (24.12.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை - (24.12.2022)


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு - நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாநகர மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து  வரவேற்றனர். தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: மயிலை நா. கிருஷ்ணன், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளர் மு. சேகர்,  திண்டுக்கல் வீரபாண்டி, நாராயணன் மற்றும் தோழர்கள்.

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.12.2022) சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையில் இருந்து அமைதிப் பேரணி திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் தொடங்கி பெரியார் திடல் வந்தடைந்தது.


பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது

சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் 
வீ. குமரேசன் மாலை அணிவித்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள். 

No comments:

Post a Comment