நாமக்கல், டிச. 25- 27.11.2022 அன்று மாலை 6 மணியளவில் நாமக்கல் பூங்கா சாலையில் ஜாதி ஒழிப்புப் போராட்டங்களுக்கு வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கழக பேச்சாளர்கள் வழக் குரைஞர் சு.சிங்காரவேலு மற்றும் தருமபுரி யாழ்.திலீபன் சிறப்பு ரையாற்றினார்.
நாமக்கல் மாவட்டச் செயலா ளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி தலைமையு ரையாற்றினார். நாமக்கல் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ வரவேற்புரையாற்றினார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், நாமக் கல் மாவட்ட தலைவர் ஆ.கு.குமார், பொதுக்குழு உறுப்பினர் வை.நடராசன், இந்திய கணசங்கம் கட்சித் தலைவர் மு.பெ.முத்துசாமி முன்னிலை வகித்தனர்.
இப்பொதுக்கூட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பேரவைத் தலைவர் புலவர் ப.கருப்பண்ணன், நாமக்கல் மாவட்டத் துணைத் தலைவர் கா.சா.அசேன், வெண் ணத்தூர் தலைவர் இல.ப.செல்வக் குமார், பரமத்தி தலைவர் கி.பி. செங்கோடன் மற் றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
பொத்தனூர் ப.க. நகரச் செய லாளர் மருத.அறிவாயுதம் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment