சிதம்பரம், டிச. 28- ஜாதி ஒழிப்புப் போராட்ட போராளிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் 30.11.2022, மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன் தலைமை தாங் கினார். மாவட்ட ப.க. செயலர் செங்குட்டுவன், முனைவர் இரா.திருமாவளவன், ஆறு.கலைச் செல் வன், நகர தலைவர் கோவி.குண சேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ப.க. தலைவர் கோநெடுமாறன், பரங் கிப்பேட்டை ஒன்றிய தலைவர் கு.தென்னவன், மாவட்ட இளை ஞரணி செயலர் சிற்பி.சிலம்பரசன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி ஆகியோர் உரையாற்றிய பின்னர், மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோ வன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.சுரேஷ் கலந்து கொண்டனர்.
இரா. பொய்யாமொழி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment