அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரம் சென்னை மாநகராட்சி இணைந்து செயல்பட மேயர்கள் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரம் சென்னை மாநகராட்சி இணைந்து செயல்பட மேயர்கள் கலந்துரையாடல்

சென்னை,டிச.7- சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதா வது, சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படு வது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று (6.12.2022)நடந்தது.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மாநகராட் சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரித்தார்.

இந்நிகழ்வில் மேயர் பிரியா, அமெரிக்க அய்க்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ நகரத் தின் மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி னார். தொடர்ந்து சகோதரத்துவ நகரங்களின் இணைப்பாக 2 மாநகரங்களின் பொருளா தாரம், கல்வி, சுகாதாரம், அடிப் படை கட்டமைப்பு விஷயங் களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும்வகையில் 2 மேயர் களும் ஒத்துழைப்புடன் செயல் படுவோம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கைஅமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகர மேயர் மற்றும் அவரது குழு வினர் பார்வையிட்டனர். இந் நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார், சான் ஆன்டோனியோ நகர மேனாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தூதர் ஜூடித் ரவின் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment