சென்னை,டிச.14-, தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு டிச. 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தலை மைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, டிச. 18ஆம் தேதி காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக் கப்பட்ட விண்ணப்பதா ரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது.
நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்
விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment