தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி-யுடன் இணைப்பு ஒன்றிய அரசின் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி-யுடன் இணைப்பு ஒன்றிய அரசின் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை, ஜன. 8- இந்தி யாவில் வெளியாகும் திரைப்படங்களை நிர்வ கிக்கவும், ஆவணப்படுத் தவும் திரைப்படப் பிரிவு, திரைப்பட விழா இயக்கு நரகம், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், இந் தியக் குழந்தைகள் திரைப் படச் சங்கம் ஆகிய பிரிவு கள் உருவாக்கப்பட்டன. ஒன்றிய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த 4 அமைப்புகளையும் இணைக்க, ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசனை தெரிவித்தது. அதை ஏற்று கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றிய அமைச் சரவை ஒப்புதல் அளித் தது. இதற்குத் திரையுலகி னர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் 4 அமைப்புகளும் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (என்.எஃப். டி.சி) அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடே சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃபிலிம் டிவிஷன் ஆஃப் இந்தியா, என் எஃப்ஏஅய், டிஎஃப்எஃப் ஆகியவை இழுத்து மூடல். வரலாறு தங்களுக்கு சாத கமாக இல்லாதபோது அதை அழிப்பதே கோழைகளின் செயல். வரலாற்றுக் காட்சிகளின் மூலப்பொருட்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புவோம்” எனக் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment