ஒற்றுமை நடைப்பயணம் : உ.பி.யில் நுழைந்தார் ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

ஒற்றுமை நடைப்பயணம் : உ.பி.யில் நுழைந்தார் ராகுல் காந்தி

கவுதம்புத்தர் நகர்,ஜன.4  ராகுல் காந்தி மேற் கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணம் நேற்று  உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடங் கியது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி   டில்லியின் செங் கோட்டை வரை 3,122 கிமீ தொலைவுக்கு நடைப்பயணம் நடை பெற்று வருகிறது. 

இந்த நடைப்பயணம் டில்லியில் செவ்வாய்க் கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்கியது. 

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட் டத்தில் செப்டம்பர் 7-இல் தொடங்கிய  பயணம் கேரளம், ஆந்திரம், தெலங் கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ் தான் உள்ளிட்ட மாநிலங் களைத் தொடர்ந்து தலை நகர் டில்லியை அடைந் தது. புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு நேற்று  (3.1.2023) மீண்டும் தொடங்கியது   உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது. 

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் நடை பெறும் நடைப்பயணத் தில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாத வுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்து. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர் நடைப் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித் தார்.   அவர் நடைப்பய ணத்தில் பங்கேற்க மாட் டார் என சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீரில் ஜன.20-இல் நுழையும் நடைப் பய ணத்தை சிறீநகரில் ஜன.30-ஆம் தேதி தேசிய கொடியேற்றி ராகுல் காந்தி நிறைவு செய் கிறார். 

இந்த நடைப்பயணம், தென் மாநிலங்கள், பஞ்சாப், ஹரியாணா, ம.பி., ஹிமாசல், உ.பி. உள்ளிட்ட மாநிலங்கள் வழியே நடைபெற்று ஜம்மு -காஷ்மீரில் நிறை வடை கிறது.


No comments:

Post a Comment