செய்திச் சுருக்கம். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

செய்திச் சுருக்கம்.

நீக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், விருதுநகர், நாமக்கல் உள்பட ஆவின் நிறுவனங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்த 201 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உறுதி

சென்னையில் புராதன சின்னங்கள், பழைமையான வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசும், மெட்ரோ ரயில் நிருவாகமும் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளன.

நியமனம்

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத் தலைவராக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் 

ப.ரங்கநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் நடைபெறும் அனைத்து  திட்டப் பணிகளையும் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்  என இத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு

ஒப்புதல்

தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.19,744 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தடை

உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலை பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இடஒதுக்கீடு இல்லாமல் நடத்தலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாதிப்பு

இந்தியாவில் அய்ந்தே முக்கால் கோடிக்கும் அதிகமானோர் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கண்காணிப்புப் பணி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் சார்பில் அமல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், கற்றல், கற்பித்தல் பணிகள் மற்றும் பொதுத் தேர்வுகள் போன்றவற்றை, மாவட்ட வாரியாக கண்காணிக்க 32 உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment