டிஜிட்டல் முறையில் ஆய்வு அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

டிஜிட்டல் முறையில் ஆய்வு அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்

சென்னை, ஜன. 7- சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதிக்கு உட் பட்ட 18 பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப் பட்டிகை (வயர்லெஸ் டேப் லெட்) ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங் களை மாணவர்க ளின் கற்றல் திறனை மேம்ப டுத்தும் நோக்கில் ரியான் டெக் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.முதல் கட்டமாக, சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளி, கொய்யாத்தோப்பு தொடக்கப் பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப் பள்ளி, இருசப்பா தெரு உயர்நிலைப் பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை நடுநிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஜப்பான் டிஜிட்டல் தொழில் நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி கற்றல், கற்பித் தல் முறை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. சிந்தாதிரிப் பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச் சாலையில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


No comments:

Post a Comment