'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள்

ரூ.15,610 கோடியில் 8 புதிய தொழில் முதலீடுகள்

சென்னை,ஜன.5- தமிழ்நாட் டில் ரூ.15,610 கோடி மதிப்பில் 8 புதிய தொழில் முதலீடு களுக்கு  அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேர வையின் 2023ஆம் ஆண்டுக் கான முதல் கூட்டம் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். ஆளு நரின் உரையில், தமிழ்நாடு அரசின் சாதனைகள், திட் டங்களின் தொகுப்பு இருக் கும் என்பதால், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதையொட்டி, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில், தமிழ்நாடு அமைச்சர வைக் கூட்டம் நேற்று (4.1.2023) நடை பெற்றது. இதில், ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத் துகள், திட்டங்கள், தொழில் முதலீடுகள், புதிய தொழில் கொள்கை குறித் தெல்லாம் விவாதித்து, ஒப்புதல் அளிக் கப்பட்டது.

பின்னர், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 

தொழில் துறையில் புதிதாக ரூ.15,610.43 கோடி மதிப்பிலான, 8 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 8,776 வேலைவாய்ப் புகள் உருவாகும்.

குறிப்பாக, மின்சார வாகனங்கள், மின்கலன் உற் பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் தொழில்நுட்பம், ஜவுளி, ஆக்சிஜன் உற்பத்தித் தொழில் பிரிவுகளில் இந்த முதலீடுகள் அமைந்துள்ளன. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென் னையை ஒட்டிய பகுதிகளில் புதிய தொழில்கள் அமையும்.

மேலும், தென் தமிழ் நாட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, குலசேகரப்பட்டி னத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளதால், சுற்றி யுள்ள பகுதிகளில் அது தொடர்பான தொழில்களும், கங்கைகொண்டானில் டாடா பவர் திட்டம், தோலில்லாத காலணி உற் பத்தி போன்ற தொழில்களும் அமையும். பரந்தூர் விமான நிலையம் அமையும் பகு தியைச் சுற்றி சில முதலீடு களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் மின்னணு வாகனக் கொள் கையில் திருத்தம் செய்யப் பட்டு, சாலை வரி உள்ளிட்ட சில விதிவிலக்குகள் அளிக் கப்பட்டுள்ளன. மின் வாக னங்கள் உற்பத்தி உள்ளிட் டவை தொடர்பான தொழில் கொள்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், கூடு தல் செயலர் மரியம் பல்லவி பல்தேவ் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment