பட்டுக்கோட்டையில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

பட்டுக்கோட்டையில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

பட்டுக்கோட்டை,பிப்.14- பட்டுக்கோட்டை மாவட் டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.  

பட்டுக்கோட்டை நகர ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிருந்தாவன்  மேல்நிலைப்பள்ளி, எஸ். இ .டி மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அதிராம்பட் டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு அரசு  உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், மற்றும் பங்கேற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் 

ஆ.இரத்தின சபாபதி, ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி, ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.இரங்கசாமி, நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகர் ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர்.

அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி,வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினர்.

No comments:

Post a Comment