பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தமிழ்க் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தமிழ்க் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை

மாவட்ட ஆட்சியர் பங்கேற்று சிறப்பித்தார்

தஞ்சை, பிப். 21- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாபெ ரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் 17.02.2023 அன்று நடைபெற்றது

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்ததாவது:-.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நமது மரபின் வளமையையும், பண்பாட் டின் செழுமையையும், சமூக சமத்துவத் தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண் பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர் கள் முன்னிலையில் நடைபெற்று வரு கிறது. 

இந்நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்தி ரன் தமிழ்நாடு நவீனமடைந்த கதை என்ற தலைப்பிலும் கவிஞர் நந்தலாலா அகப் பொறியின் திறவுகோல் கேள்விகளின் சிறப்பு என்ற தலைப்பிலும் சொற்பொழி வாற்றினார்கள்.

-உலகின் பல்வேறு பகுதிகளில் செழித் தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண் பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதி யாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளா தார முன்னேற்றம், திசைதோறும் திரா விடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சுற் றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழி வாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகளைக் கேட்டறிவதுடன், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லா மல் சக மாணவர்கள் மற்றும் நண்பர் களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர் வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் நந்தலாலா, முனைவர். பேரா.சி. செந்தமிழ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செ. இலக்கியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் சக்திவேல், வல்லம் பேரூ ராட்சி செயல் அலுவலர் பிரசுந்தநாயகி, முத்துக்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment