மத்தியப் பிரதேசத்தில் தொடரும் மதவெறியாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

மத்தியப் பிரதேசத்தில் தொடரும் மதவெறியாட்டம்

கிறிஸ்தவ வழிபாட்டுத்தலத்தை சூறையாடி 'ராம்' என்று எழுதிவைத்த ஹிந்து அமைப்பினர்

போபால் பிப் 14 கிறிஸ்தவ மத வழிபாட்டுதலம் சூறையாடப்பட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைக்கபட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் நர்மதபுரம் மாவட்டம் சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலமான சர்ச் உள்ளது. பழங்குடியினரைப் பெரும்பான்மையாக கொண்ட இந்தப் பகுதியில் கிறிஸ்தவ மத வழி பாட்டுதலத்தில் பிரார்த்தனைகள் நடைபெறு வது வழக்கம்.  இந்நிலையில், இந்த கிறிஸ்தவ மதவழிபாட்டு தலம்  சில  நபர்களால் சூறை யாடப்பட்டுள்ளது. 

மத வழிபாட்டு தலத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை சூறையாடிய அந்த கும்பல் அங்குள்ள சுவரில் 'ராம்' என்று எழுதி வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் 'ராம்' என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் அன்று ஹிந்து அமைப்பினர் இதே வழிபாட்டுத்தலத்திற்கு வந்து இங்கு பூஜை மட்டுமே நடத்தவேண்டும் கிறிஸ்துவவழிபாடு நடத்தினால் அனைவரையும் தீவைத்து கொளுத் துவோம் என்று மிரட்டிவிட்டுச்சென்றனர். இது தொடர்பாக கிறிஸ்தவர்கள் புகார் அளித் தும் யார்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.


No comments:

Post a Comment