செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

செய்திச் சுருக்கம்

ஆங்கில பயிற்சி

தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி மார்ச் மாதம் முழுவதும் நடக்க உள்ளதால், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

சிறப்பு முகாம்

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் மார்ச் 1ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி என இரண்டு நாள்கள் இ.எஸ்.அய். சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என இ.எஸ்.அய். நிர்வாகம் அறிவிப்பு.

தொடர்பில்லை

‘அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ள உத்தரவிற்கும், சட்டமன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தகவல்.

தூய்மைப் பணிகள்

சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்.

ஒப்படைப்பு

சென்னையில் சாலைகளில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த 12 பேர் ‘காவல் கரங்கள்' மூலம் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் மாநகர காவல்துறையால் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.


No comments:

Post a Comment